ஜூலை 2-ம் தேதி காவிரி ஆணைய கூட்டம் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

துணை முதலமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு
ஜூலை 2-ம் தேதி காவிரி ஆணைய கூட்டம் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
x
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லியில் வரும் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்துகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளரும், காவிரி ஆணையத்தின் தமிழக பிரதிநிதியுமான பிரபாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பாசனத்திற்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா அரசை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்