கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, வருகிற 5ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டையை பின்பற்றுமாறு சித்தராமையா கூறியதை ஏற்காமல், பட்ஜெட் பணிகளில் முதலமைச்சர் குமாரசாமி ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நிலைப்பது கடினம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்னவாகும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் சித்தராமையா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை சந்தித்ததால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், சித்தராமையாவின் இந்த வீடியோ குறித்து நீர்வளத் துறை அமைச்சரான காங்கிரசை சேர்ந்த டி கே சிவகுமார் கூறுகையில், கட்சி முடிவின்படி 5 ஆண்டுகள் அரசு நீடிக்கும் எனவும் தனிநபர் கருத்து எதுவும் கிடையாது எனவும் தெரிவித்தார். இதற்கிடையே, ஊடகங்கள் தான் இந்த விஷயத்தை பெரிதாக்குவதாக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
Next Story