"அரசு திட்டங்கள் மூலம் வரும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள்" -எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் வேண்டுகோள்.

அரசின் திட்டங்களை தடுத்து, ஆயிரக்கணக்கானவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள் என எதிர்க்கட்சிகளுக்கு, துணை சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு திட்டங்கள் மூலம் வரும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள் -எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் வேண்டுகோள்.
x
சட்டபேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உரையாற்றினார். அப்போது, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல், பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலைக்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு சாலைத்திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், அதனை வராமல் தடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பை கெடுத்து விடாதீர்கள் என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்