பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.
தமிழக சட்டப்பேரவையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சபாநாயகர் வாதத்தை கேட்காமலேயே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சின்னராஜ், நட்ராஜ், மனோகரன், மனோரஞ்சிதம் ஆகிய 7 பேரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக 11 பேர் வாக்களித்த நிலையில், பன்னீர்செல்வம் உள்பட 7 பேருக்கு எதிராக மட்டுமே சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதோடு, அவர்கள் மீது மட்டுமே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், உச்ச நீதிமன்றத்திலும் அந்த 7 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.