"கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை

திரைப்பட கட்டணம் குறித்து பேரவையில் விவாதம்: "கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை
கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை
x
சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் வாகை சந்திர சேகர் பங்கேற்று பேசினார். அப்போது, சாலைகளில் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறினார். திரைப்பட கட்டண உயர்வால், திரைத்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இணையதளங்களில் படங்கள் வெளியாவதால் மிகவும் பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜி.எஸ்.டி.க்கு பிறகு, நூறு ரூபாய்க்கு குறைவான கட்டணத்துக்கு 18 சதவிகித வரியும், நூறு ரூபாய்க்கு அதிகமான கட்டணத்துக்கு 28 சதவிகித வரியும் விதித்துள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான் என தெரிவித்தார். மேலும், கேளிக்கை வரியையும் 30 சதவீதத்தில் இருந்து முதலில் 10 சதவீதமாகவும் பின்னர் 8 சதவீதமாகவும் குறைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதையடுத்து, 8 சதவீத கேளிக்கை வரியையும் ரத்து செய்ய வேண்டும் என வாகை சந்திர சேகர் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்