திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

நாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் 192 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் - கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்
திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்
x
நாமக்கல்லில் ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று சென்றிருந்தார். அவரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வன், பரமத்தி வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ மூர்த்தி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்கப்பட்டிருந்தனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதம் இருந்த 192 தி.மு.க.வினர் மீது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அவர்கள் அனைவடும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 


நாமக்கலில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர், கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற கைதுகளுக்கு அஞ்சி, போராட்டத்தை கைவிடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்