காவிரி மேலாண்மை ஆணையத்தில் குறைபாடுகள் உள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். காவிரி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் உறுப்பினர்கள் பெயர் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள காவிரி அமைப்பு செயல்படுத்தும் நிலையில் இல்லை என்பதால் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டால் அதனை கர்நாடக மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.
Next Story