முதல்வர் வீட்டு முகவரிக்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு அனுப்பப்படும் மத்திய அரசின் கடிதங்கள்
புதுச்சேரி முதலமைச்சருக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் கடிதங்கள், எதிர்க்கட்சி தலைவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோயில் வீதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியின் வீடு திலாசுபேட்டில் விநாயகர் கோயில் தெருவிலும் உள்ளது. இந்நிலையில், வாரியத் தலைவர் பதவி தொடர்பாக புதுச்சேரி அரசு, மத்திய அரசிடம் சில விளக்கங்களை கேட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பு செயலர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம், முதலமைச்சருக்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முகவரி மாறியது தொடர்பாக, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, இதுபோல் பல கடிதங்கள், எதிர்க்கட்சி தலைவர் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தனர்.
Next Story