"அதிமுக, பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - ஸ்டாலின்
மத்திய, மாநில அரசுளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு லுங்கி, சட்டை, புடவைகள் மற்றும் பிரியாணி அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், 25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, இரண்டு முதியோருக்கு உதவித் தொகை, காது கேட்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கிற ஆட்சி மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சியாக உள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மக்கள் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடைப்பதில்லை என்றும் ஸ்டாலின் புகார் கூறினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்
Next Story