ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சமூக விரோதிகள் சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் கலவரம் ஏற்பட்டதாக ரஜினி கூறியிருந்தார்.
இதையடுத்து, அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் குறித்து, தவறாக கருத்து தெரிவித்ததாக ரஜினி மீது ஒசூர் காவல் நிலையத்தில், சிலம்பரசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாததால், ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், கோரிக்கை தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
Next Story