துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி
x
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஸ்டெர்லைட் நிறுவனம் அபராதமாக செலுத்திய தொகையின் வட்டிப்பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டதாகவும்  அவர் கூறினார். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சந்தீப் நந்தூர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்