விடுமுறைக்கு பின்னர் இன்று கூடிய சட்டப்பேரவை - தி.மு.க. பங்கேற்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்...
இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று கூடியது. இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த துறைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிப்பார். விவாதத்தின் இறுதியில், இந்த துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாட்களுக்கு பிறகு தி.மு.க உறுப்பினர்கள் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் படி, அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Next Story