18லட்சம் மாணவர்களுக்கு...முதல்வர் கொடுத்த அப்டேட் | CM Stalin | Tamilnadu | CM Stalin | Students

x

சுமார் 18 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின் வாகன உற்பத்தியில் தமிழகம் அதிக முதலீடுகளைப் பெற்று இருப்பதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்