15 கோயில்களுக்கு 1,430 கோடி - அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

x

தமிழகத்தில் 15 திருக்கோயில்களில் ஆயிரத்து 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரியபாளையம், திருச்செந்தூர், இராமேஸ்வரம்,

திருவண்ணாமலை, திருத்தணி, சமயபுரம், வடலூர், பழனி, திருவேற்காடு, இருக்கண்குடி ஆகிய இடங்களில் உள்ள 10 கோயில்களில், ஆயிரத்து 230 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், அழகர்கோயில், மருதமலை, சிறுவாபுரி, மேல்மலையனூர், குமாரவயலூர் ஆகிய 5 கோயில்களில் 200 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படது. இதுதவிர ஒவையார் மணிமண்டபம், திருவள்ளுவர் கோயில், மலைக்கோயில்களுக்கு செல்வதற்கு ரோப் கார் வசதி, குளங்கள் சீரமைப்பு, கோயில் சிலைகள் பாதுகாப்பு, கோயில் குடமுழக்கு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்