100 நாள் 100 கம்பம் - `NO' சொன்ன போலீஸ் - மீறி பாஜக செய்த சம்பவம்
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்களை நட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பாஜகவினர் தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை நடுவதற்காக காவல் நிலையங்களில் கடிதம் கொடுத்த போது, முறையான மாநகராட்சி அனுமதி இல்லை என்பதால் கொடிக்கம்பம் வைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சியின் அனுமதியின்றி பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொடிகளை ஏற்ற முயன்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அத்துமீறி பாஜக கொடி ஏற்றியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 800 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னை வேப்பேரியில் அத்துமீறி கொடி ஏற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.