10 அம்ச கோரிக்கைகள்.. தேர்தல் பணியில் கை வைத்தஊழியர்கள்
ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்று, விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகங்களிலும் இரவு முழுக்க போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், சேலத்தில் போராட்டம் நடத்திய அலுவலர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர்.
Next Story