நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நீட் விவகாரத்தில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மனுவில், நீட் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்ட போதே மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோர், மொழி பெயர்ப்பில் குழப்பம் ஏற்பட்டால்,  ஆங்கில கேள்விகளின் அடிப்படையில் பதிலளிக்க தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு  ஏற்புடையது அல்ல என்றும், இதனை அமல்படுத்தினால் ரேங்க் பட்டியலை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 3 ஆயிரத்து 580 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்