கர்ப்பிணிகளே உஷார்.. குழந்தைகளை தாக்கும் அரக்கன்.. மீண்டும் கிளம்பியுள்ள வைரஸ் தொற்று

x

கர்நாடகாவில் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஊரக மாவட்டம் ஜிகினி பகுதியில் 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் கர்ப்பிணிகள் என்றும், ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், மற்ற இரண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை வளர்ச்சியும் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே பகுதியில் கர்ப்பிணிகள் உட்பட 6 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்