ஓணம் பண்டிகையை குறிவைத்த இளைஞர் ...ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்... கிடைத்த ரகசிய தகவல்
கேரளாவில் ஐந்தரை கிலோ கஞ்சாவுடன் 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓணம் பண்டிகையை ஓட்டி, வெளிமாநிலத்திலிருந்து கேரளாவுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையில் ஐந்தரை கிலோ கஞ்சாவுடன் வலம் வந்த 21 வயது இளைஞர் மகேஷ் மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, கேரளாவில் விற்பனை செய்து வந்தது தெரியவர, ஐந்தரை கிலோ கஞ்சாவை இளைஞரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story