உலக சின்னமான சிவன் கோயில் - UNESCO அறிவிப்பு

x

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் கர்நாடகாவில் உள்ள ஹொய்சாலா கோயில்களை யுனெஸ்கோ சேர்த்துள்ளது. கர்நாடக மாநிலம் சோமநாதபுரா மற்றும் ஹலபீடு அருகே பேலூரில் ஹொய்சாலா கோயில்கள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில், இந்த சிவன் கோயில்கள் கட்டப்பட்டவையாகும். இவற்றை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இதனை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமிதமாகவும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நினைவுச் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கலைத்திறனுக்கு சான்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்