cab-ல் செல்லும் பெண்களே உஷார்!.. மொபைலை நோட்டமிட்டு நடக்கும் சூச்சமம் - "இதை கவனிக்காமல் விட்டால்.."

x

பெங்களூரில் பள்ளித்தோழன் என அறிமுகமாகி, பெண்ணிடம் இருந்து 750 கிராம் தங்கம், 20 லட்ச ரூபாய் பணத்தை கார் ஓட்டுனரே அபகரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வாடகை காரில் பயணம் செய்தபோது, செல்போனில் தனிப்பட்ட தகவல்களை தோழியுடன் பேசிக் கொண்டு சென்றார். அவற்றை கார் ஓட்டுனர் கிரண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு, சிறிது காலத்துக்குப் பிறகு பள்ளித்தோழன் எனக் கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமாகி, இரு தவணைகளாக 20 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். மேலும், 750 கிராம் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். கிரண் மேலும் பணம் கேட்டதால், சந்தேகம் அடைந்த அந்த பெண், மற்ற தோழிகளுடன் கேட்டபோது, அவர் பள்ளித்தோழன் இல்லை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, கிரண் குமாரிடம் அந்த பெண் தெரிவித்தபோது, அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், ராமமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, கிரணிடம் இருந்து நகைகளை மீட்டுள்ளனர். வாடகை வாகனங்களில் பயணிக்கும்போது தனிப்பட்ட விஷயங்களை தவிர்க்க வேண்டும் என பெங்களூரு கிழக்கு மண்டல டிசிபி பீமா சங்கர் குலேத் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்