"பெண்கள் மாமியார் அல்லது தாயின் அடிமைகள் அல்ல" - கேரள உயர்நீதிமன்றம் கருத்து
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர், விவாகரத்து வழக்கை கொட்டாரக்கரை குடும்பநல நீதிமன்றத்திலிருந்து, தலச்சேரி குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பெண் தாக்கல் செய்த முதல் மனுவை, திருமணத்தின் புனிதத்தை புரிந்துகொண்டு ஒன்றாக வாழ வேண்டும் எனக்கூறி திருச்சூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து புகார்தாரர் கொட்டாரக்கரை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் திருச்சூர் குடும்பநல நீதிமன்ற முன்மொழிவை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. திருச்சூர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆணாதிக்க இயல்புடையது என்றும், பெண்கள் தங்கள் தாய் அல்லது மாமியாருக்கு அடிமைகள் அல்ல என்றும் தெரிவித்தது. மேலும் இந்த மனுவை கொட்டாரக்கரா குடும்பநல நீதிமன்றத்தில் இருந்து தலச்சேரி குடும்பநல நீதிமன்றத்துக்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.