ஆண் நபருடன் ஓடிய மனைவி.. கணவனை மிரட்டிய காவலர்.. காவல் நிலையம் முன் தீக்குளித்ததால் அதிர்ச்சி

x

விஜயவாடாவை சேர்ந்த மணிகண்டா என்பவரின் மனைவி துர்காவுக்கு சோனு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கணவரை பிரிந்து பாக்கராபேட்டையில் அவருடன் வசித்து வருகிறார். இதையறிந்த மணிகண்டா, திருப்பதியை அடுத்த சந்திரகிரியில் காவல் நிலையத்தில் தனது மனைவியை மீட்டுக் கொடுக்குமாறு புகார் அளிக்கச் சென்றார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த சீனிவாஸ் என்ற காவலர், அலட்சியமாக நடந்து கொண்டதுடன் மணிகண்டாவை கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதாக தெரிகிறது. இதனால், மனவேதனை அடைந்த மனிகண்டா, அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று, பெட்ரோல் வாங்கி வந்து, காவல் நிலையம் எதிரே தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காவல் நிலயைத்தை நோக்கி ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள், அவரை மீட்டு திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மணிகண்டாவிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்