சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது? - காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர்.!

x

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர்.!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் 10 நாட்கள் தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத்தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதனால், வழக்கத்தைவிட தாமதமாகவே சிபிஎஸ்இ தோ்வுகள் நடத்தப்பட்டன.10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டன. தேர்வு முடிவினை மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அதுகுறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அதன்படி விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வருவதால் விடைத்தாள்கள், அங்கிருந்து கொண்டுவரப்பட்டு மதிப்பெண்கள் கணக்கிட்டு பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாக மேலும்10 நாட்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்