நிலவின் மர்ம பிரதேசத்தின் நிலை என்ன? - விக்ரம் அனுப்பிய மாஸ் அப்டேட் | Chandrayaan 3

x

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக, இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் சுமார் 10 சென்டிமீட்டர் வரை மேற்பரப்பின் வெப்பநிலை அளவிடப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறித்த விரிவான ஆய்வு இக்கருவி மூலம் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், பத்து வகையான சென்சார் உதவியுடன், நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக தென் துருவத்தில் வெப்பநிலை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. வெப்பநிலை வேறுபாடுகள் மற்றும் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வு தொடர்கிறது...


Next Story

மேலும் செய்திகள்