ஒரே தீர்ப்பில் 24,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - அதிரடி காட்டிய கொல்கத்தா ஐகோர்ட்

x

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தில் 24 ஆயிரம் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்காக மாநில அளவிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனங்களையும் ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... இதன் விளைவாக மொத்தம் 24 ஆயிரம் நியமனங்கள் ரத்தாகின்றன... மேலும், புதிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தொடங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளது... சிபிஐ நடத்திய விசாரணையில், முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் பல அதிகாரிகள் மோசடியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்