"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கெலாட் போட்டியிட்டால் ராஜினாமா செய்வோம்" - ஆதரவு எம்எல்ஏக்கள் மிரட்டல்

x

"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கெலாட் போட்டியிட்டால் ராஜினாமா செய்வோம்" - ஆதரவு எம்எல்ஏக்கள் மிரட்டல்

ராஜஸ்தானில் முதலமைச்சராக அசோக் கெலாட் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதால்,

அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேசியத் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். இதனால், காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நேற்று

நடைபெறுவதாக இருந்த‌து. அதே நேரத்தில், அடுத்த முதல்வராக ச‌ச்சின் பைலட்டை தேர்ந்தெடுக்க, அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90பேர் எதிர்ப்பு

தெரிவித்துள்ளனர். அசோக் கெலாட்டே முதல்வராக தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதோடு, தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக எம்எல்ஏ

பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளனர். மேலும், ராஜினாமா கடிதங்களுடன் சபாநாயகரை சந்தித்து பேசினர். இதனிடையே, காங்கிரஸ்

பார்வையாளர்கள் அஜய் மாக்கென், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும், எம்எல்ஏக்களை தனித்த‌னியே சந்தித்து பேசுமாறு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, எம்எல்ஏக்களை சந்தித்து பேசி சமாதானம் செய்ய உள்ளதாக அஜய் மாக்கென் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் திடீர் போர்க்கொடியால்,

அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்