புதைந்த வயநாடு முண்டகையில் வெளியேவரும் மனித உடல்கள்... ஒவ்வொரு நாளும் திக் திக்

x

வயநாட்டில் மீண்டும் நடைபெற்ற தேடுதலில் மீட்கப்பட்ட ஆறு உடல் பாகங்களில் ஐந்து பாகங்கள் மனிதர்களுடையது என பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டகை பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் குழு, தீயணைப்புத் துறை, வனத்துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனடிக்காப்பு அருகே கண்டெடுக்கப்பட்ட ஆறு உடல் பாகங்கள் சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 5 உடல் பாகங்கள் மனிதர்களுடையது என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் வேண்டுகோளின்படி, ஆனடிக்காப்பு முதல் சூச்சிப்பாறை வரை மீண்டும் தேடுதல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 231 சடலங்களும் 217 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்