வயநாட்டில் ராணுவத்திற்கு இணையாக களமிறங்கிய ஹைட்ராலிக் ஆபரேட்டர்ஸ் - "ரூ.1 கோடி கொடுத்தே ஆகணும்"
வயநாடு மீட்பு பணியில், ராணுவத்திற்கு இணையாக மீட்பு பணியில் ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் ஈடுபட்டு வருவதாக எர்த் மூவர் ஆபரேட்டர் நல சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் இடைகால் அருகே நடைபெற்ற சங்கத்தின் திறன் மேம்பாடு நிகழ்ச்சியில், ஆபரேட்டர்களுக்கு முறையாக பாதுகாப்பாக செயல்படுவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் சாமி செல்வ மூர்த்தி, அரசு பணிகளின் போது ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
Next Story