வயநாட்டில் மீண்டும் அட்டாக்? திடீர் அலர்ட்.. இரக்கம் காட்டாத இயற்கை

x

கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நாளையும் மஞ்சள் அலர்ட் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கன மழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லாத போதிலும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் இடங்களிலிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் - நாளை கேரள கடற்கரையில் அதிக அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரள கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்