குகையில் துடித்த 3 பிஞ்சுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த கடவுள்கள்... ரியல் ஹீரோக்கள் தந்தி டிவியில்

x

3 நாள் குகையில் துடித்த 3 பிஞ்சுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த மனித கடவுள்கள்... நாடே போற்றும் ஹீரோக்கள் தந்தி டிவியில்

கேரளாவில், நிலச்சரிவின் போது குகையில் சிக்கித் தவித்த பழங்குடியின குடும்பத்தை மீட்பு படையினர் காப்பாற்றி அழைத்து வந்த திக் திக் நிமிடங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

டிசி, மார்வெல் காமிக்ஸ் என கற்பனை உலகத்தின் சூப்பர் ஹீரோக்கள் கதை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆபத்தில் இருக்கும் மக்களை தங்கள் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுபவர்களே அந்தக் கதையின் பிரதான பாத்திரங்களாக இருப்பார்கள்.

ஆனால், நிஜத்தில் சத்தமில்லாமல் பல சாகசங்களை புரியும் மீட்பு படையினர் அனைவருமே சூப்பர் ஹீரோக்களுக்கும் மேலானவர்கள். கேரளாவின் வயநாடு பகுதி முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் மரண ஓலம் ஓய்ந்த பாடில்லை. சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சூழலிலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கும் மீட்பு படையினரின் பணி இன்றி அமையாதது. அவ்வாறு ஒரு பழங்குடியின குடும்பத்தை வெறும் 20 மீட்டர் கயிறு கொண்டு மீட்டு வந்திருக்கிறார்கள் மீட்பு படையினர்.

பணியர் இன பழங்குடியின மக்கள் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை மீட்பு படையினர் வழங்கி வந்தனர். அப்போது ஒரு பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகள் நீர்வீழ்ச்சி அருகேயுள்ள குகையில் மூன்று நாள்கள் உணவின்றி தவித்து வருவதாக முறையிட்டுள்ளார். இதைக் கேட்ட மீட்பு படையினர், உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.

ஆனால், நினைத்ததை விட அவர்களை மீட்டு வருவது பெரும் சவாலாக அமைந்தது. தொடர்ச்சியாக பெய்த மழை ஒரு புறமென்றால், நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றொரு புறம். அதுவும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றி வெறும் 20 மீட்டர் கயிறு மட்டுமே அவர்கள் கைவசம் அந்த தருணத்தில் இருந்தது. இந்த சவாலான காரியத்தை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆசிஃப் நமக்கு விளக்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்