வயநாடு பேரழிவுக்கு காரணம் `மனிதன்' - உடைந்த ரகசியம்.. வெளிவந்த உண்மை

x

மேற்கு தொடர்ச்சி மலை மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவுகளை தவிர்ப்பது தொடர்பாக ஆய்வு செய்த மாதவ் காட்கில் குழு 2011 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கேரளா மற்றும் பிற மேற்கு தொடர்ச்சி மாநிலங்களில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்களை தவிர்க்க பரிந்துரைத்தது. இப்போது வயநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது நிலச்சரிவு என ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் மாதவ் காட்கில் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா அரசு சூழலியல் குறித்த ஆய்வறிக்கையை புறக்கணித்தது என கூறியிருக்கும் அவர், பேரிடர் ஏற்பட்ட இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் குவாரிகள் இயங்கியது நிலைமையை மோசமாக்கியிருப்பதாக குறிப்பிட்டார். சுற்றுலாவுக்காக கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற செயல்கள் பலவீனமான சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் எச்சரித்துள்ளார். இப்போது குவாரிகள் செயல்படவில்லை என்றாலும் அவை செயல்பட்ட போது அதிர்வுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் போது நிலச்சரிவுக்கு வழிவகைச் செய்யும் என தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பருவநிலை மாற்றம் மோசமாகி, அதீத மழை, வெள்ளம் மற்றும் வறட்சியால் பேரழிவுகள் மீண்டும் நிகழும் எனவு எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்