வயநாடு பேரழிவு... அதிகாரப்பூர்வமாக வெளியான பேரதிர்ச்சி தகவல் - இரக்கம் காட்டா இயற்கை
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை முற்றிலும் மண்ணில் புதைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு முண்டக்கையில் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், முண்டக்கை முற்றிலுமாக புதைந்துள்ளதாகவும், மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டறிய கூடுதல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதியில் மண் மற்றும் பெரிய பாறைகள் இருப்பதால் தேடுதல் மிகவும் கடினமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முண்டக்கையில் மட்டும் 900 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாகவும், குழந்தைகள், தோட்டத் தொழிலாளர்கள், சொகுசு விடுதி ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முண்டக்கையில் மட்டும் மொத்தம் 431 கட்டிடங்களில் எட்டு எஸ்டேட்டுகள் உள்ளதாகவும், இதில், புஞ்சிரிமட்டம் மற்றும் வெள்ளரிமலையில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வெளிமாநில தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.