"எனக்கு தூக்கம் வருது நாளைக்கு போன் பண்ணுனு சொன்னானே.." கோயிலோடு உள்ளே புதைந்த மகன்

x

"எனக்கு தூக்கம் வருது நாளைக்கு

போன் பண்ணுனு சொன்னானே.."

கோயிலோடு உள்ளே புதைந்த மகன்

வயநாட்டில் துடித்து நின்ற தமிழர் உயிர்

வீட்டு வாசலில் பிணமாக வந்த கணவன்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டாவது நபரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்த போது, உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த அய்யன் கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாண குமார். இவர் கேரள மாநிலம் வயநாடு சூரல்மலையில் தங்கி, அங்குள்ள சிவன் கோயிலில் 10 ஆண்டுகளாக அர்ச்சராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினருக்கு தகவல் கிடைத்ததும், உடனே தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃபில் இருந்ததால், கேரளா சென்று பார்த்தபோது அதிர்ச்சிமேல் அதிர்ச்சி காத்திருந்தது.

கல்யாண குமார் தங்கியிருந்த கோயில், வீடு இருந்த இடமே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு மரம் மட்டுமே இருந்துள்ளது. பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட உடல் ஒன்று மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததும், அங்கு சென்று பார்த்த போது, கல்யாண குமார் உயிரிழந்தது அறிந்து அதிர்ந்தனர்.

கல்யாண குமாரின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இரவு 7 மணிக்கு சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கண்ணீருடன் காத்திருந்த உறவினர்கள், உடலை பார்த்ததும் கதறி அழுதனர்.

தண்ணீரில் அடித்துச் சென்றாலும் தப்பித்திருப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும், ஆனால் இறந்துவிட்டதாக கல்யாண குமாரின் மனைவி மஞ்சுளா கண்ணீர் வடித்தார்.

கல்யாண குமார் இல்லாமல், மகள் மற்றும் மகனை மஞ்சுளா எப்படி கரைசேர்க்க போகிறாரோ என்று உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். கல்யாண குமாரின் மறைவால் அய்யன்கொல்லி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்