வயநாடு துயரம்... கேரளாவுக்கு கை கொடுத்த தமிழக நடிகர்கள் பட்டியலை வெளியிட்ட முதல்வர் பினராயி
வயநாடு நிலச்சரிக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதிஉதவி அளித்தவர்களின் பட்டியலை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாயும், சூர்யா 25 லட்சம் ரூபாயும், கார்த்தி 15 லட்சம் ரூபாயும், ஜோதிகா 10 லட்சம் ரூபாயும் வழங்கியதாக பினராயி விஜயன் பட்டியல் வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு 10 லட்சம் ரூபாயும், நடிகர் மம்முட்டி 20 லட்சமும், பகத் பாசில் - நஸ்ரியா நசிம் தம்பதி 25 லட்சமும், நடிகர் துல்கர் சல்மான் 15 லட்சமும் வழங்கியதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மதுபான கழகம் ஒரு கோடி ரூபாய் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.