"வீடு கட்ட 1000 ஏக்கர் தாரேன்...நா சம்பாதித்தது இவர்களுக்குத்தான்" - வயநாட்டையே காக்க வந்த வள்ளல்
"வீடு கட்ட 1000 ஏக்கர் தாரேன்...நா சம்பாதித்தது இவர்களுக்குத்தான்" - வயநாட்டையே காக்க வந்த வள்ளல்
வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த 100 பேருக்கு வீடுகட்ட 1000 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் பிரபல மலையாள தொழிலதிபர் பாபி செம்மனூர்... இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
வயநாடு நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம்...
பிழைத்தாலும் இனி வாழ வழியில்லை என்ற புலம்பல்கள் தான் திரும்பும் திசையெல்லாம் வயநாடு முழுக்கவே எதிரொலிக்கிறது...
பணம் செலவழித்து பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாய் கட்டிய வீடுகள் ஒரே நிமிடத்தில் மண்ணுக்குள் புதைந்து போவதை யார்தான் தாங்கிக் கொள்ள முடியும்..
நிவாரண முகாம்களை விட்டுச் சென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்க இடமில்லை..
இப்படிப்பட்ட சூழலில் தான் வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த 100 பேருக்கு வீடுகட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார் வள்ளல் பாபி செம்மனூர்..
செம்மனூர் நகைக்கடை நிறுவனரான பாபி செம்மனூரின் உதவி வாழ வழியின்றி தவித்த மக்களுக்கு வரப்பிரசாதம்..
அத்துடன்...உணவு, உடை, மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் போன்ற எந்தத் தேவையாக இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளலாம் என உதவிக்கரம் நீட்டியுள்ளார்..
இதற்கு முன்னும் பல சமூக சேவைகள் செய்துள்ள பாபி செம்மனூரின் இரக்க குணம் ஏற்கனவே அறிந்ததே..
தொழிலைப் போலவே பாபி செம்மனூரின் மனசும் தங்கம் என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்..