இயற்கை பிடியில் சிக்கி மீளாத வயநாடு..நெருக்கடி கொடுக்கும் நிறுவனங்கள்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீண்டவர்களை, அவர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நிர்பந்தித்து வருகின்றனர்... கேரள மாநிலம், வயநாடு, மேம்பாடி, சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் கடந்த 30-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடரின் தாக்கம் தங்களை விட்டு அகலாமல் மக்கள் தவிக்கும் சூழலில், அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நிர்பந்தித்து வருகின்றனர். இதனால் தாங்கள் மீண்டு வரும் வரை தங்களுக்கு அவகாசம் வழங்குமாறு பொதுமக்கள் நிதி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story