புதந்த பூமிக்குள் துடித்த இதயம்...உயிரோடு 86 பேர்... பெரும் துயரிலும் துளிர்க்கும் நம்பிக்கை

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344-ஆக அதிகரித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில் நான்காவது நாளான நேற்று மேலும் 9 உடல்கள் மற்றும் 5 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344- ஐ தாண்டியுள்ள

நிலையில் இதுவரை 107 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 116 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

130 உடல் பாகங்களின் டிஎன்ஏ மாதிரிகள்

சேகரிக்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட 86 பேர்

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை

பெற்று வருகின்றனர். வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 91 நிவாரண முகாம்களில்

10 ஆயிரத்து 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேப்பாடியில் உள்ள 17 முகாம்களில் 2 ஆயிரத்து 599 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்