இன்னும் அடங்காத வயநாட்டின் ஓலம்..உயிரை பற்றி எண்ணமால் களமிறங்கிய தமிழகத்தின் 8 சிங்க பெண்கள்..

x

இன்னும் அடங்காத வயநாட்டின் ஓலம்..உயிரை பற்றி எண்ணமால் களமிறங்கிய தமிழகத்தின் 8 சிங்க பெண்கள்.. ராணுவம் எடுத்துள்ள திடீர் முடிவு

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்படும் ஆதரவற்ற உடல்களையும், உடல் உறுப்புகளையும் முறைப்படி அடக்கம் செய்வதற்காக கோவையிலிருந்து பெண்கள் குழு வயநாடு வந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட உடல்களும், உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்படும் உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் நிலையில், ஆதரவற்ற உடல்களும், உடல் பாகங்களும் அரசு சார்பில் அடக்கம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், கோவையில், ஆதரவற்ற உடல்களை மீட்டு அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் 8 பேர் கொண்ட பெண்கள் குழு, மீட்புப்பணிகளில் உதவுவதற்காக வயநாடு வந்துள்ளது. அங்கு மீட்கப்படும் ஆதரவற்ற உடல்களையும், உடல் பாகங்களையும் முறைப்படி பேக் செய்து, அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட உள்ளனர். அதற்கான உபகரணங்கள், துணிகள் உள்ளிட்டவற்றுடன் வயநாடு வந்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்