நாடே நடுங்கிய வயநாடு பேரழிவு...சரியாக 30 நாட்களுக்கு பின் இன்றும் தொடரும் பெரும் சோகம்

x

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 400க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய வயநாடு நிலச்சரிவு நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில், கடந்த மாதம் 30ஆம் தேதி

பெய்த கனமழை காரணமாக, முண்டக்கையின் சூரல்

மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு கிராமங்கள்

அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்தன. நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 78 பேரை காணவில்லை.17 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லாமல் அனைவரும் உயிரிழந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகள் இழந்து நிற்கதியாகினர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள்

குடும்பத்திருக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள

நிவாரண நிதியைக் கோருவதற்கு 58 குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் யாரும் முன் வராதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் தேடுதல் பணி தொடர்கிறது. பலர் உறவுகலை இழந்து மீள முடிய துயரத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்