சூட்சுமத்தை கண்டறிந்த பாஜக - பிரியங்காவுடன் நேருக்கு நேர் மோதும் குஷ்பு..?

x

சூட்சுமத்தை கண்டறிந்த பாஜக - பிரியங்காவுடன் நேருக்கு நேர் மோதும் குஷ்பு..?

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நடிகை குஷ்பு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலின்போது 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அத்தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்தியன் மொக்கேரியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் எம்.பி. சீட்டில் தனது கணக்கை தொடங்கிய பா.ஜ.கவுக்கு திரையுலக நட்சத்திரம் தான் கை கொடுத்தது. திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றதைப் போல், வயநாடு தொகுதியிலும் திரையுலக பிரபலத்தை நிறுத்தலாமா? என பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வயநாட்டில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் உள்ள நிலையில், நடிகை குஷ்புவை போட்டியிடச் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்