வயநாட்டை புரட்டி போட்ட பேரழிவு.. கால்நடைகளின் நிலை என்ன?.. மருத்துவக்குழு சொன்ன சோக சேதி

x

வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதால், மாடு வளர்ப்போர் தவித்து வருகின்றனர். முண்டகை, சூரல்மலை, அட்டமலை பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஏராளமான கால்நடைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. உயிர்தப்பிய மாடுகள் அச்சத்துடன் தேயிலைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருகின்றன. மாடு வளர்ப்பவர்கள், பால் கொடுக்கும் மாடுகளை பிடித்து, பால் கறந்து பின்னர் நிலப்பகுதியில் விடுகின்றனர். இதனிடையே, இறந்த மாடுகள் குறித்து கால்நடை மருத்துவக்குழுவினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்