திருப்பதியில் படி ஏறி செல்லும் பக்தர்களுக்கு புதிய எச்சரிக்கை
திருப்பதி மலையில் நடமாடும் சிறுத்தை, கரடியை பிடிக்க கூண்டு வைத்துள்ள வனத்துறை பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பதி முதலாவது மலைப்பாதை, சிறப்பு விருந்தினர் மாளிகை அருகே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை வனத்துறை உறுதி செய்துள்ளது. கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இதைதொடர்ந்து, கரடி, சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். படிக்கட்டு வழியாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Next Story