சந்திரபாபு நாயுடு மகனுக்கு 400 கிலோ மீன் மாலை போட்டு ஆந்திராவை அதிரவிட்ட தொண்டர்கள்
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு, 400 கிலோ எடையிலான மீன் மாலையை அணிவித்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வரவேற்பளித்தனர். யுவகளம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் லோகேஷ், ஏலூரூ மாவட்டத்தில் இருந்து மேற்கு கோதாவரி மாவட்டத்தை அடைந்தது. அப்போது மாவட்ட எல்லையில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 400 கிலோ எடையிலான மீன் மாலையை கிரேன் உதவியுடன் லோகேஷுக்கு அணிவித்து வரவேற்றனர்.
Next Story