புதினுடன் கைகோர்த்த கிம் ஜாங் உன்... உலகையே திரும்ப வைத்த ஒற்றை சந்திப்பு

x

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக, வடகொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் வந்து இறங்கிய புடினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டித் தழுவி வரவேற்றார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் புடினின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே வடகொரிய பயணயம் அமையும் என கூறப்படுகிறது. வடகொரியாவுக்கு புறப்படுவதற்கு முன், உக்ரைனுக்கு எதிரான போரில், வடகொரியா தங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு புடின் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்