விழிஞ்சம் போதைப் பொருள் கடத்தல் வழக்கு...14-ஆவதாக கைதானவர் மீது NIA குற்றப்பத்திரிகை

x

கேரளாவின் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 300கிலோ ஹெராய்ன் மற்றும் ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட வழக்கில், 16 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதில், 13 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் 14ஆவதாக கைது செய்யப்பட்ட சென்னை, சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவர் மீது சென்னை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட போதைபொருள் கடத்தல் மன்னன் குணசேகரனின் பினாமியான ஆதிலிங்கம், சினிமாவில் உதவியாளராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் பணிபுரிந்து கொண்டே, போதை பொருள் விற்பனையில் கிடைக்கும் ஹவாலா பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் தோற்றுவிக்க பயன்படுத்தி வந்ததாகவும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்