மெட்ரோ ரயில் பாதையில் தடம் புரண்ட வாகனம் - பெங்களூரில் பரபரப்பு

x

பெங்களூரு நகரில் ராஜாஜி நகர் பகுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வாகனம் தடம் புரண்டதால் பரபரப்பு

பெங்களூரு நகரில் யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் மெட்ரோ பச்சை வழித்தடத்தில் உள்ள ராஜாஜி நகர் பகுதியில் இன்று அதிகாலை மெட்ரோ சோதனை ஓட்ட வாகனம் தடம் புரண்டது. இந்த வழித்தடத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதை கண்டறிந்த மெட்ரோ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வாகனம் டிராக் மாறி தடம் புரண்டது. ஒரு வழித்தடத்தில் சோதனை ஓட்ட வாகனம் தடம் புரண்டதால் தற்பொழுது ஒற்றை வழித்தடம் மூலமாக மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது இதனால் மெட்ரோ ரயில் தொடர்ந்து இயக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் தடம்புரண்ட சோதனை ஓட்ட வாகனத்தை சரி செய்து மெட்ரோ ரயில் சேவையை சீராக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்