வரதட்சணை கேட்டு கொடுமை..- அம்மா வீட்டிலிருந்த மனைவியைக் கொன்ற கொடூர கணவன்

x

உத்தரபிரதேசத்தில், வரதட்சணை தராததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று கணவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பைகேடா கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். 2 ஆண்டுகளுக்கு முன் மீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த மீனாவை, வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு அழைத்து வந்து சுந்தர் சித்ரவதை செய்திருக்கிறார். இதில், மனைவியை அவர் கழுத்தை நெரித்து கொன்று தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், சுந்தர் உட்பட அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரி என நால்வரின் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்திருக்கும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்