ஒரேமாதிரி காதலனுடன் ஓடிய 11 மனைவிகள் - தேடி தவித்த அப்பாவி கணவர்கள்...உ.பி.யை அதிர வைத்த மெகா மோசடி

x

சொல்லி வைத்தார் போல் ஒரேமாதிரி

காதலனுடன் ஓடிய 11 மனைவிகள்

தேடி தவித்த அப்பாவி கணவர்கள்

உ.பி.யை அதிர வைத்த மெகா மோசடி

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வந்த உடனே அதை அப்படியே எடுத்துக் கொண்டு கணவனை விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்களால் உத்தரபிரதேச மாநிலம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது...

வீடற்று அவதியுறும் மக்களின் துயர் துடைப்பதற்கு ஏற்ப, நாடு முழுவதும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீடு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது...

இத்திட்டம் பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திலும் பிரபலமாகவுள்ள நிலையில், மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்தி 350 பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்..

இதில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டி கொள்வதற்காக 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்..

இந்நிலையில் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில், முதல் தவணை செலுத்தப்பட்டவர்கள் கட்டுமான பணிகளை தொடங்கி விட்டனரா என்பதை காண அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது தான் அங்கே நடந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது..

மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் முதல் தவணை பணம் பெற்ற சிலர் கட்டுமான பணிகளே தொடங்கவில்லை. காரணம், முதல் தவணை பணத்தை பெற்ற குடும்பத்தலைவிகள், அதனை தங்கள் கணவருக்கு தெரிவிக்காமல், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்...

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 11 பெண்கள் பணம் கணக்கில் வந்த உடனே தங்கள் காதலனுக்கு மெசேஜ் கொடுத்து பணத்துடன் ஜூட் விட்டுள்ளனர்..

முதல் தவணை பணம் வந்ததும் தெரியாமல், காதலனுடன் அவர்கள் மாயமானதும் அறியாத கணவன்மார்கள், மனைவியை காணவில்லை என அப்பாவியாக தேடி வந்துள்ளனர்..

இதனிடையே பணம் வந்த பிறகும் ஏன் வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை என அதிகாரிகள் நேரில் வந்து கேட்ட போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதே அப்பாவி கணவன்மார்களுக்கு தெரியவந்துள்ளது..

இதையறிந்து அதிர்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்களின் கணவர்கள் 2வது தவணை பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றித்தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இதே மாவட்டத்தில் கடந்த ஆண்டும், 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்ட நான்கு பெண்கள் தங்கள் கணவனை விட்டு விட்டு காதலனுடன் மாயமான சம்பவமும் இதே உத்தரபிரதேசத்தில் அரங்கேறிய சூழலில் இப்போது மீண்டும் அதே பாணியில் நடந்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்