யோகிக்கு எதிராக திரும்பிய துணை முதல்வர்? - டெல்லியில் நடந்த முக்கிய மீட்டிங்

x

உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களில் வெல்ல, பாஜக கூட்டணி 36 இடங்களை பெற்று தோல்வியை தழுவியது. பாஜக தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பணியாற்றும் விதமும் ஒரு காரணம் என உள்ளூர் பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டுவதாக செய்திகள் வெளியாகியது. இந்த சூழலில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் கேசவ் மவுரியா, அரசாங்கத்தைவிட கட்சி பெரியது, கட்சியைவிட யாரும் பெரியவர் இல்லை என பேசினார். மேடையில் யோகி ஆதித்யநாத்தை கேசவ் மவுரியா மறைமுகமாக விமர்சித்ததாக பேச்சு எழுந்தது. இந்த சூழலில் கேசவ் மவுரியா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஜே.பி. நட்டாவிடம் பேசியது என்ன என்பது குறித்து மவுரியா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மாறாக ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச பாஜக தலைவர் புபேந்திர சிங் சவுத்ரியை சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பெரிய மாநிலத்தில் பாஜகவில், முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல் போக்கு என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.


Next Story

மேலும் செய்திகள்